
ABIRAMI ANDHATHI (21 to 25)
21.மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள்,
வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள்,வெளியாள், பசும் பெண்கொடியே.
தமிழ்ப்பொருளுரை
மங்கலத்தை வழங்குகின்ற என்றும் சுமங்கலியாக விளங்கும் அபிராமி அன்னையே!செப்புக்கலசம் போன்ற நகில்களையுடையவளே! மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணிந்த சிவந்த கரங்களையுடையவளே!சகல கலைகளும் அறிந்த மயில் போன்றவளே! கங்கையைத் தன் திருமுடியில் தரித்த சிவபெருமானின் சரிபாதியான உமையவளே! பொன் போன்று ஒளிர்பவளே! நீயே நீலியாகவும், மகாலட்சுமியாகவும்,கலைமகளாகவும் என்றும் பசுமையான பெண் கொடியாகவும் விளங்குகன்றாய்!
Tamil meaning: Rajathi G
English Meaning
Mother! You are always a sacred married woman who showers the devotee with abundant favours. You have red pot-like breasts. You adorn your reddish-pretty wrists with white conch bangles. You dwell in the mountain, and you share the left side of the god, who wears the Ganges on his head.
You are Neeli, Mahalakshmi, Saraswati and you are an attractive young woman who resembles a fresh green creeper.
22.கொடியே, இளவஞ்சிக் கொம்பே, என க்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே,பனி மால் இமயப் பிடியே,
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே, அடியேன்
இறந்திங் கினிப்பிற வாமல்வந் தாண்டுகொள்ளே.
