
Abirami Andhathi (31 to 35)
31. உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில்வந்திங்
கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார், இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே.
த மிழ்ப்பொருளுரை
அபிராமி அன்னையே! உமையொருபாகனாக காட்சியளித்ததோடு நில்லாமல் என்னை எப்போதும் உங்கள் மேல் அன்பு செய்வதற்கு அருள்புரிந்தீர்கள். இனி எனக்குச் சிந்திப்பதற்கு வேறு சமயங்களும் தேவை இல்லை. இனி என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் தேவை இல்லை.
மூங்கில் போன்ற தோளையுடைய மங்கையர்பால் எனக்கு மோகமும் இல்லை.
English Meaning
The amalgamation of Goddess Uma and Lord Shiva, forming the divine Ardhanareeshwara has chosen me as their devout disciple. Henceforth, I cannot fathom any alternative faith or religion.
No mother shall bear me in future births.
I lack the inclination to bestow my affection upon women, whose broad shoulders resemble bamboo stalks.
32. ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து, ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே.
தமிழ்ப்பொருளுரை
ஈசனின் இடப்பாகத்தில் அமைந்த அபிராமி அன்னையே! நான் ஆசையென்னும் துன்பக் கடலில் மூழ்கி அருளற்ற எமனின் பாச வலையில் சிக்கயிருந்தேன். அந்த நேரத்தில் நறுமணம் பொருந்திய உன்னுடைய பாதக்கமலம் பாவியாகிய என்னை வலிய வந்து ஆட்கொண்டது. அன்னையே! இத்தகைய பெரும் நேசத்தை என்னவென்று சொல்லுவேன்!
English Meaning
Abhirami! Lord Shiva, embracing you by his left side, is your constant companion. I found myself drowning in the turbulent sea of desires, ensnared by the unrelenting grip of Anthaka. It is difficult to express the magnitude of your grace, as you willingly bestowed your lotus feet upon me, accepting me as one of your faithful followers.
33. இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனைநடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய், அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே,
உழைக்கும் பொழுது உன்னையே, அன்னையே என்பன் ஓடிவந்தே.
